வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!

1635514198 1297736 hirunews
1635514198 1297736 hirunews

கொவிட் 19 தொற்றுதியான நிலையில், காணாமல் போய் இருந்த கொத்மலை காவல்துறை உத்தியோகத்தர் கம்பளை ஆதார வைத்தியசாலையின் நீர்தாங்கியிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

சுமார் 40 அடி உயரமான குறித்த நீர்த்தாங்கியிலிருந்து வெளியேறிய துர்நாற்றத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுமார் 50 நாட்களுக்கு முன்னர் கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர் காணாமல் போய் இருந்தார்.

இந்த நிலையில், இன்று (29) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவரது உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.