முல்லைத்தீவில் 8 மில்லியன் ரூபா செலவில் அனர்த்த தடுப்பு செயற்திட்டம்!

150929160016 mullaithivu 512x288 bbc nocredit
150929160016 mullaithivu 512x288 bbc nocredit

முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 மில்லியன் ரூபா செலவில் அனர்த்த தடுப்பு செயற்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின்கீழ் நீர்பாயும் பகுதி அனர்த்த்தினை தடுக்கும் நோக்கில் புனரமைப்பு பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பணிகளுக்காக 2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் சர்வோதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் நீர்பாசன திணைக்களத்தின் ஒத்துளைப்புடன் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடக்க நிகழ்விலை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு தொடக்கி வைத்துள்ளார்.