கர்ப்பிணி தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்க தீர்மானம்

Pregnant Woman
Pregnant Woman

கர்ப்பிணி தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சில வரையறைகளுடன் அவர்களை சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்க அந்தந்த நிறுவனங்கள், தமது தேவைக்கேற்ப தீர்மானிக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கருத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டார்.