யானை வேலிக்காக பனம் விதை நடும் நிகழ்வு வவுனியாவில் ஆரம்பம்

DSC02306 resize 8
DSC02306 resize 8

யானை வேலிக்கு பதிலாக பனம் விதைகளை நடும் செயற்பாடு நேற்று (03) மாலை வவுனியா கிறிஸ்தவகுளம் கிராமத்தில் இடம்பெற்றது.

பனை அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக 150,000 (ஒரு இலட்சத்தி ஐம்பதனாயிரம்) பனம் விதைகள் நடப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிறிஸ்தவகுளம் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிருசாந்த பத்திராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர, செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர் எஸ்.தர்மேந்திரா, பனை அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தேனி வளர்ப்பதன் மூலம் யானையை விரட்ட முடியும் என்ற செயற்பாட்டிற்காக 10 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக பரீட்சார்த்த செயற்பாடாக தேனீ வளர்ப்பு கூடுகளும் வழங்கப்பட்டிருந்தது.