யாழில் வாள்வெட்டு ;ஒருவர் படுகாயம்

தாக்குதல்
தாக்குதல்

கொக்குவில் கேணியடிப் பகுதியில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் குறித்த பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞனே காயமடைந்துள்ளார்.

ஒரு மோட்டார் சைக்கிலில் வந்த 3 பேராலேயே அந்த இளைஞர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

கை, கால் பகுதிகளில் காயமடைந்த குறித்த இளைஞர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.