முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்புடன் கரையொதுங்கும் தாவரங்கள்!

USER SCOPED TEMP DATA de5ff1e874537e3e8550a550be3e5b6869918ce020b5c6a8c3fdc91390b0a16f
USER SCOPED TEMP DATA de5ff1e874537e3e8550a550be3e5b6869918ce020b5c6a8c3fdc91390b0a16f

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதேவேளை முல்லைத்தீவு கடல் கொந்தளிப்பாக காணப்படுவதோடு கடற்கரையில் தாவரங்கள் பல கரையொதுங்கி வருகின்றன.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் மீனவர்கள் எவரும் தொழிலுக்கு செல்லவில்லை. இதேவேளை கடல் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் கடற்தாவரங்கள் பல கரையொதுங்கி வருகின்றன. முல்லைத்தீவு கடற்கரையில் பல கிலோமீற்றர் தூரத்துக்கு இவை கரையொதுங்கியுள்ளன.

இதனால் மீனவர்களில் மீன்பிடி தொழிலுக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை நேற்று யாழ்ப்பாண கடற்கரையிலும் இவ்வாறு கடற்தாவரங்கள் பல கரையொதுங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.