குடும்பச் சண்டையை தடுக்கச் சென்ற இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு !

lk army2
lk army2

குடும்பச் சண்டையை தடுக்கச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை-கூலிகொட-வில்லிகொட பிரதேசத்தில் விஜயபா இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதுடைய சிப்பாயே ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்

நண்பர் ஒருவர் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட போது, இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்த போதே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.