வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தற்போதுள்ள நிபந்தனைகளை தளர்த்த யோசனை!

download 26
download 26

இறப்பர் தொடர்பான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அவர், இறப்பர் சார்ந்த உற்பத்திகளுக்கான முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சேதன உரங்களின் உற்பத்தி அளவை அதிகரிக்க கிராம சேவையாளர் பிரிவு மட்டத்தில் புதிய வேலைத்திட்டம் தயாரிக்கவும், பயிரிடப்படாத காணிகளை அதிகபட்சமாகப் பயன்படுத்த புதிய சட்டங்களை அமுல்படுத்தவும் நிதி அமைச்சர் பாதீட்டில் முன்மொழிந்தார்.

விவசாயிகளின் வரப்பிரசாதங்களை பாதுகாத்துக்கொள்ள பசுமை விவசாய அபிவிருத்தி சட்டமூலத்தை கொண்டு வர யோசனை முன்வைக்கப்பட்டது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தற்போதுள்ள நிபந்தனைகளை தளர்த்தவும் நிதி அமைச்சர் முன்மொழிந்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலையை நிர்மாணிக்க இடம் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது.