நாட்டில் இதுவரை 15,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

95375515 95270464 c0093043 feeding mosquito
95375515 95270464 c0093043 feeding mosquito

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 47.4சதவீத அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த வருடமும் 31,162 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகளவில் உள்ளதால், பொதுமக்கள் சுற்றுப்புற சூழலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமெனத் தொற்றுநோய் தடுப்பு பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.