வரவு செலவு திட்டம் இலங்கையை சோமாலியாவாக மாற்றும் – சஜித்

பிரேமதாச 675x360 1
பிரேமதாச 675x360 1

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலங்கையை சோமாலியாவாக மாற்றும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மக்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்கள் அதில் இல்லை என குற்றம் சாட்டினார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தெளிவான வேலைத்திட்டம் மற்றும் குறுகிய அல்லது நீண்ட கால செயற்திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தற்போதைய குழப்பத்தில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு பதிலாக பேரழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் வகுக்கப்பட்டுள்ளன

வரவு செலவுத் திட்டத்தினூடாக கடன் சுமைக்கு தீர்வு வழங்கப்படவில்லை எனவும் அதேவேளை வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கையிருப்புகளை அதிகரிப்பதற்கான திட்டங்களும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து வரவு செலவுத்திட்டத்தில் தெளிவான அறிவிப்புக்கள் இல்லை என்பதனால் இது உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.