180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் துனீசிய பிரஜை கைது!

arrest with drug heroin
arrest with drug heroin

180 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 4 கிலோ 527 கிராம் கொகேய்னுடன் சர்வதேச நிறுவனமொன்றின் தலைவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கலாநிதி பட்டம் பெற்ற சர்வதேச நிதி நிறுவனமொன்றின் தலைவர் என்பதை காட்டும் போலி ஆவணங்களையும் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

59 வயதுடைய துனீசிய பிரஜையான குறித்த சந்தேக நபர், தனது கைப்பையில் கொகேய்னை மறைத்து வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் துனீசியாவிலிருந்து பிரேசிலுக்கு பயணித்து, அங்கிருந்து தோஹாவிற்கு சென்று பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பயணியொருவரால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட அதிகூடிய கொகேய்ன் தொகை இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காகக் குறித்த நபரையும் அவர் கொண்டு வந்த கொகேய்னையும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.