23 தமிழக மீனவர்கள் விடுதலை:படகுகள், மீன்பிடி உபகரணங்கள் அரசுடைமையானது!

Navy Attack Mannar Fishermans Problems 1 1
Navy Attack Mannar Fishermans Problems 1 1

எல்லைத் தாண்டி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதிவான், மீனவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அறிவித்து அதனை ஓராண்டுக்கு ஒத்தி வைத்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

மேலும் மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதற்கமைய, குறித்த மீனவர்கள் கொழும்பில் உள்ள மிரிஹான முகாமில் தங்க வைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் விமானம் மூலம் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.