திருமண நிகழ்வுகளுக்கு மதுபானம் விநியோகிப்பவர்களை கைதுசெய்ய முடியும்!

3207250b alcohol 850x460 acf cropped

புதிய சுகாதார வழிகாட்டல்களின்படி, திருமண நாளன்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய இயலுமை காணப்படுவதாக மதுவரித் திணைக்கள ஆணையாளரும், ஊடக பேச்சாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை, திருமண நிகழ்வுகளுக்கு மதுபானங்கள் விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், திருமண மண்டபங்களில்  மதுபானம் அருந்துவது குறித்த காலப்பகுதியில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதார வழிகாட்டல்களை அமுல்படுத்தக்கூடிய அதிகாரம் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு காணப்படுவதாகவும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் குறிப்பிட்டார்.