வழமைக்கு மாறாக வடக்கிலும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Vegetables
Vegetables

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மரக்கறிகள் பயிரிடப்படாததால் வடக்கில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக வடக்கு மரக்கறி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து வட மாகாணத்துக்கு மரக்கறிகள் கொண்டு செல்லப்பட வேண்டியதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்திருந்த போதிலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பயிரிடப்படும் மரக்கறிகள், வட மாகாணத்தினுள்ளேயே பகிரப்படுவதால் அம்மாகாணத்தில் மரக்கறிகளின் விலைகள் இதற்கு முன்னர் அதிகரிக்கவில்லை.

அண்மைய உர நெருக்கடி, கொரோனா தொற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாண விவசாயிகள் மரக்கறிகளைப் பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதால், மரக்கறிகளைக் கொண்டு செல்ல முடியாமல் சிரமத்தை எதிர்நோக்கிய வடக்கில் உள்ள பல விவசாயிகள், காய்கறிகளைப் பயிரிடுவதை தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.