20 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பூஸ்டர் ஷாட்!

hemantha
hemantha

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் ஷாட் வழங்க சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் பயன்படுத்தப்படும் கொவிட் தடுப்பூசியின் எந்த வகையினதும் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் ஒரு மாதத்தின் பின்னர்  பூஸ்டர் ஷாட்களைப் பெறலாம்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும்போதே  சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனைக் கூறினார். 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இரண்டு புதிய சுற்றறிக்கைகளில் இன்று கையொப்பமிட்டுள்ளதாவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஒன்று பூஸ்டர் ஷாட் பெறுவதற்கான பல்வேறு நோய்கள் உட்பட தகுதி அளவுகோல்களை விவரிக்கிறது மற்றையது பாடசாலையொன்றில் கொவிட் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பானது ஆகும்.