முல்லைத்தீவில் 04 குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார் மஸ்தான்

received 272077758071433
received 272077758071433

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளர் பிரிவில்    நான்கு குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது

vlcsnap 2021 11 20 16h09m58s103

கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் “செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்” திடடத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில்  ஒவ்வொன்றும் தலா நான்கு மில்லியன் பெறுமதியான இருபது குடிநீர் திட்டங்கள்  இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

received 963472497850427

அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட  நான்கு இடங்களில் நனோ தொழிநுட்பத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று(20) இடம்பெற்றது

received 592955855267084

அதனடிப்படையில் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளர் பிரிவில் கூழாமுறிப்பு  கிராம அலுவலர் பிரிவில் நான்கு மில்லியன் பெறுமதியான நனோ தொழிநுட்பத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(20) மாலை 2.30 மணிக்கு இடம்பெற்றது நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான், ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளர் த.அகிலன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

received 1819856184872228

இதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளர் பிரிவில் காதலியார்சமணங்குளம், கற்சிலைமடு, ஒலுமடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும் குறித்த குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது