ரீட் மாவத்தை உணவகத்தில் பதிவான வெடிப்புச் சம்பவம்: எரிவாயு கசிவினால் ஏற்பட்டதாக உறுதி

288599 4
288599 4

கொழும்பு – கறுவாத்தோட்டம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரீட் மாவத்தையில் உள்ள உணவகத்தில் பதிவான வெடிப்புச் சம்பவம் எரிவாயு கசிவினால் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் எரிவாயு கொள்கலன் வெடித்தோ அல்லது வெடி பொருள் காரணமாகவோ ஏற்படவில்லையென அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – கறுவாத்தோட்டம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரீட் வீதியில் அமைந்துள்ள கட்டடமொன்றில் இன்று(20) காலை வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றது.

வெடிப்பு சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவினரும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்தனர்.