கொவிட் தொற்றால் இறந்த குழந்தைகளைப் பிரசவிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்வு

Pregnant Woman
Pregnant Woman

கொவிட் தொற்று காரணமாக, இறந்த குழந்தைகளைப் பிரசவிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை, இரு மடங்காகி உள்ளதென அமெரிக்க நிறுவனமொன்று நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சி.டீ.சி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்டா பிறழ்வின் காரணமாக, இந்த விகிதம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதென அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில், அமெரிக்க வைத்தியசாலைகளில் இடம்பெற்ற 1.2 மில்லியன் பிரசவங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளது.