நாடாளுமன்றத்தின் இறுதித் தீர்மானம் இன்று

625.320.560.350.160.300.053.800.868.160.90
625.320.560.350.160.300.053.800.868.160.90

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றின் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறியப்படுத்தப்படவுள்ளது.


இதற்கமைய. சபாநாயகர் பதவிக்காக அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் பெயரும், ஆளுந்தரப்பு பிரதம அமைப்பாளர் பதவிக்கு  அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள ஆளுந்தரப்பு நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிய வருகின்றது, இதன்போது, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்கான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவின் பெயர் அந்தப் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.