யாழ் கொடிகாமம் சந்தியில் டிப்பர் வாகனம் சந்தைக் கட்டடத்தில் மோதி விபத்து!

screenshot 20211125 1627028120114135035399225
screenshot 20211125 1627028120114135035399225

யாழ்ப்பாணம் – கொடிகாமம் சந்தியில் வீதி கடவை ஒளிச் சமிக்ஞை நிறைவுறும் நேரத்தில் சந்தியை கடக்க முயன்று வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் சந்தைக் கட்டத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் ஏ9 வீதி கொடிகாமம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை. ஆனாலும் டிப்பர் வாகனம் சந்தைக் கட்டடத்துடன் மோதி விபத்து இடம்பெற்றதால் டிப்பர் வாகனம் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி வேகமாக முன்னே பயணித்த டிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியது. பின்னே வேகமாக வந்த இரண்டாவது டிப்பர் நிறுத்த முற்பட்ட போதும் வேக கட்டுப்பாட்டை இழந்து கொடிகாமம் சந்தை கட்டடத்துடன் மோது விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் சற்று நேரத்திற்கு போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது.