தேசிய குத்துச்சண்டை அணிக்குள் வடக்கு மாகாண மாணவர்!

625.500.560.450.380.600.708.800.900.160.90
625.500.560.450.380.600.708.800.900.160.90

இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் வடக்கு மாகாண மாணவர் ஒருவர் உள்வாங்கப்பட்டுள்ளார்.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 6-ல் கல்வி கற்றுவரும் ஆர்.கே.கெவின் (வயது 11) என்ற மாணவனே தேசிய ‘கிக் பாக்சிங்’ அணிக்குள் தெரிவாகியுள்ளார்.

சர்வதேச கிக் பாக்சிங் பயிற்றுவிப்பாளரான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 21ம் திகதி பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானதில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை போட்டியிலே குறித்த மாணவன் பங்குபற்றவுள்ளர் .

வடக்கு மாகாண குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமாரின் பயிற்சியின் மூலம் தேசிய ரீதியில் பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிட தக்கது.