விராட்கோலியை புகழும் கும்ப்ளே

vikatan 2019 05 84d4ee83 a12e 4d89 baa6 130f52289053 111063 thumb
vikatan 2019 05 84d4ee83 a12e 4d89 baa6 130f52289053 111063 thumb

விராட்கோலியின் தலைமைத்துவம் குறித்து கும்ப்ளே கூறுகையில் ”விராட்கோலியை ஐந்து வருடங்களாக தலைமைத்துவ பதவியில் நாம்பார்த்திருக்கிறோம். அவர் உண்மையிலேயே முதிர்ச்சி அடைந்துள்ளார்.

அணியில் தொடர்ச்சியாக சில வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.அணி எப்போதெல்லாம் திணறியதோ, அப்போதெல்லாம் தனி வீரராக நின்று அணியை நிமிர்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் விராட்கோஹ்லி சிறந்த தலைவராக காணப்படுகின்றார் ஏனென்றால், யார்யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்.

இதே போன்று ருவென்டி 20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் தேடிப்பிடிப்பது அவசியம்”என்றும் கூறியமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தலைவராக விராட்கோலி நியமிக்கப்பட்ட போது அனில்கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக விளங்கினார்.

அப்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அனில்கும்ப்ளே தனது ஒருவருட தலைமைபயிற்சியாளர் பதவியை நீட்டிக்க விரும்பவில்லை எனவும் கூறியதாக வதந்திகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.