சமையல் எரிவாயு கொள்கலன்களின் செறிமானம் தொடர்பில் பரிசோதனை!

gas
gas

சமையல் எரிவாயு கொள்கலன்களின் செறிமானத்தை பரிசோதிப்பதற்காக விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு கொள்கலன் ஒன்று அரச இரசாயன பரிசோதனை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் எரிவாயு கொள்கலன் ஒன்று பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, சிலாபம், வெலிகம, பன்னிப்பிட்டிய மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுப் பாவனைக்கான எரிவாயு கொள்கலன்கள் வெடித்த சம்பவங்கள் பதிவாகி இருந்தன.

இன்று முற்பகல் 8 மணியளவில் நிக்கவரட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு கசிவு காரணமாகவா? இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு எரிவாயு கசிவு ஏற்படுத்துவதற்கு புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் செறிமான மாற்றமே காரணம் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்தநிலையில் சந்தையில் உள்ள எரிவாயு கொள்கலன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.