முல்லைத்தீவில் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் நடைபெற்றது!

FB IMG 1638194453587
FB IMG 1638194453587

முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மண்டபத்தில் கடந்த 26.11.2021ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டு மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்கள் பிரதேச ரீதியாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கான அனுமதி பெறல், திணைக்களங்களுக்கான காணி கையளிப்பு, தனிநபருக்கான மேட்டுநிலக் காணி மற்றும் வயல் காணிகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குதல் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் இக் கலந்துரையாடலில் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில இளம் தொழில் முனைவோரை தெரிவு செய்வதற்கான மேற்கொள்ளப்பட்ட நேர்முக தேர்வுகளின் விபரம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர், மாவட்ட செயலக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், சிரேஷ்ட நில அளவை ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவு மற்றும் காணிப்பிரிவு  உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.