பேருந்து சாரதிகளுக்கு அதிர்ச்சி தகவல்

251604655image
251604655image

பயணிகளை கருத்தில் கொண்டு பேருந்துகளில் தொந்தரவான இசை மற்றும் வீடியோக்கள் இசைப்படுவதை அனைத்து சாரதிகளும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக் கொண்டார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாரித்த 1000 பாடல்கள் இறுவட்டு விநியோகிக்கும் நிகழ்வில் இதனை தெரிவித்தார்.

மாகும்புர போக்குவரத்து மையத்தில் இந்த நிகழ்வு நடைபெற்ற போது இதில் சாரதிகள், நடத்துனர்களிற்கு 1000 பாடல் இறுவட்டு வழங்கப்பட்டது.

ஜனவரி 15ம் திகதி வரை அந்த இறுவட்டுக்களை பெற்றுக்கொள்ளலாமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

”பேருந்துகளில் இயங்கும் பல இசை வீடியோக்கள் குழந்தைகளுக்கு பொருத்தமற்றவை. தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்கு புதிய விதிமுறைகள் பொருந்தும். பொதுமக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு உரிமை உண்டு. அதிக இசை குறித்த முறைப்பாட்டை 1955 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் அழைக்கலாம்” எனவும் கூறினார்.