புதுக்குடியிருப்பிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!

received 210981531095235
received 210981531095235

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றில் இன்று காலை 11 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று காலை சமையல் செய்துகொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இருப்பினும் அருகில் யாரும் இருக்காததால் எந்த சேதமும் ஏற்படவில்லை

நாடளாவிய ரீதியில் பல்வேறு  வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில்  பதிவாகிய முதலாவது சம்பவம் இது என்பதுடன் இந்த சம்பவம் முல்லைத்தீவு மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது.