எரிவாயு கொள்கலனில் பாதுகாப்பற்ற முறையில் கசிவை பரிசோதிக்க வேண்டாம்!

gas
gas

சமையல் எரிவாயு கொள்கலனில் பாதுகாப்பற்ற முறையில் கசிவை பரிசோதிக்க முயற்சிக்க வேண்டாமென எரிவாயு அனர்த்தங்கள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சர்ச்சைக்குரிய நிலைமைக்குப் பின்னர் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு கொள்கலன்களை அடையாளம் காண்பதற்காக புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய லிட்ரோ கொள்கலன்களை அடையாளம் காண்பதற்காக, அந்நிறுவனத்தின் எரிவாயு கொள்கலன்களில் வெள்ளை பின்னணியில் சிவப்பு நிறத்திலான லிட்ரோ நிறுவனத்தின் இலட்சினை கொண்ட பொலித்தீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, புதிய லாஃப்ஸ் எரிவாயு கொல்கலன்களில் மஞ்சள் நிறப்பின்னணியில், நீல நிற இலட்சினை கொண்ட பொலித்தீன் சீல் வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த இரண்டு சமையல் எரிவாயு கொள்கலன்களின் நிறங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.