சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச்செய்யும் பொருளாதார திட்டத்தை இலங்கை வகுக்க வேண்டும்!

Photo 2 3
Photo 2 3

இலங்கை தமது பொருளாதார திட்டத்தை தாமே வகுத்து, அதற்கு சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று, கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் புத்திஜீவிகள் அமைப்பான வெரைட்டே ஆய்வகத்தின் தலைவர் நிசாந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஒருவர் வங்கியில் கடன் பெறச் செல்லும் போது, அவரது வணிகத்துக்கான திட்டத்தை அவரே தயாரிக்க வேண்டும்.

அதனை விடுத்து கடன் தருனரை வணிகத்திட்டத்தை தயாரிக்கச் செய்து, அந்த திட்டம் தமக்கு பொருந்தாது என்று புலம்பக் கூடாது.

அவ்வாறே இலங்கையும் தமது பொருளாதாரத் திட்டத்தை நிபுணர்களைக் கொண்டு தயாரித்து, அதற்கு சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச் செய்ய வேண்டும்.

மாறாக இலங்கையின் பொருளாதார விடயங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தை தீர்மானிக்க விடக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.