கல்முனை மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றம்

aaa14
aaa14

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட கல்முனை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 15 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையில் 2 ஆசனங்கள் வெற்றிடமாகவுள்ள நிலையில், 39 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பாதீட்டுக்கு ஆதரவாக 21 உறுப்பினர்களும், 6 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

5 உறுப்பினர்கள் பாதீட்டின் வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்ததுடன், 7 பேர் சபைக்குச் சமூகமளித்திருக்கவில்லை.

இதனடிப்படையில், கல்முனை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 15 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.