2012 வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் ; ரங்கஜீவா, எமில் ரஞ்சனுக்கு எதிராக ஜனவரியில் தீர்ப்பு

Transporters in india 1
Transporters in india 1

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கைதிகளை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பரிசோதகர்  நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற குழுவினால் இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் வசமிருந்த சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றுவதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி விசேட நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இதன்போது இடம்பெற்ற கலவரத்தில் எட்டு கைதிகள் உயிரிழந்தமைக்காக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக அப்போதைய சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.