இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது!

1639187491 1242289 hirunews 2
1639187491 1242289 hirunews 2

நுவரெலியா பிரதேசத்தில் கேபிள் கார் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் சுவீடன் நாட்டு நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளது.

2 கட்டங்களைக் கொண்ட கேபிள் கார் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நானுஓயாவிலிருந்து நுவரெலியா வரை 4 கிலோமீற்றர் தூரத்தில் இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படும் இந்த கேபிள் கார் பாதையானது சுவீடன் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் முழுமையாக நிதியளிக்கப்பட்டுள்ளது. 

55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 30 ஆண்டு குத்தகைக்கு இந்த திட்டம் உருவாக்கப்படும்.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் கைச்சாதிட்டப்பட்டது.