வீடு இல்லா யுகத்துக்கு விரைவில் முடிவு கட்டப்படும் – பிரதமர்

mahinda 6 1
mahinda 6 1

பிறந்த நாட்டிலே வீடு இல்லாமல் விடுதியில் வாழ்வது போன்ற யுகத்தை எதிர்வரும் சில வருடங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் 800 மாணவர்களுக்கான விடுதி மற்றும் களனி தொடருந்து பாதை விரிவாக்கத்தின் போது வெளியேற்றப்பட்ட மக்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 528 வீடுகள் அடங்கிய சரசவி உயன அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கத் துறையில் பணியாற்றி, உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தொழிலாளர் தலைவர்கள் மற்றும் அரச சேவையில் ஈடுபட்டு தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக தமது சேவை காலத்தை அர்ப்பணித்த அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்விலும் பிரதமர் கலந்து கொண்டார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல என குறிப்பிட்டார்.