பல்கலை மாணவர் ஒன்றியம் உயர் கல்வி அமைச்சருடன் சந்திப்பு

edu
edu

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் சிலர் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவை இன்று சந்தித்தனர்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் நடைமுறைப்படுத்தப்படும் நேர்முக பரீட்சை மற்றும் உடல் தகுதி பரிசோதனையை இடை நிறுத்துவது தொடர்பான கடிதம் ஒன்றை கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இவர்களை தமது அமைச்சுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் கூடுதலான கவனம் செலுத்தி செயற்படுவதுடன் பேச்சுவார்த்தை மற்றும் இணக்கப்பாட்டுடன் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்று பந்துல குணவர்தன மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

ஜனநாயக சிவில் நிருவாக கட்டமைப்பிற்குள் சுதந்திரமாக மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக்கொள்ளும் சூழலைக் கொண்ட பல்கலைக்கழக கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் வன்முறை அற்ற மற்றும் மனித நேயத்தைக்கொண்டதாக மாணவர்களுக்கு எடுத்துக்காட்டான நாடாக தரமுயர்த்தப்படும்.

கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மேலும் அதிகரிக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.