இலங்கை அணி இன்று இந்தியா பயணம்

sl vs ind t20
sl vs ind t20

ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று காலை இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளது.

மூன்று போட்டிகளில் இவ்விரு அணிகளும் பங்கேற்கவுள்ளன. முதலாவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

லசித் மாலிங்க அணியின் தலைவராவார். அஞ்சலோ மத்தியுஸ். தனஞ்சய டி சில்வா ஆகியோரும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நுவன் பிரதீப் உபாதைக்கு உள்ளாகியிருப்பதால் அவருக்கு பதிலாக கசுன் ராஜித சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இது தவிர தனுஷ்க குணதிலக, அவிஸ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, இசுறு உதான,பானுக ராஜபக்ஷ, ஓஷத பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, குசல் மெண்டிஸ், லக்ஷான் சந்தகென் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.