எரிவாயு வெடிப்பு சம்பவங்களை ஆராயும் நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

kotta 1

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று(20) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்தமையை அடுத்து, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த நவம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மொரட்டுவை பல்கலைகழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகே தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னாக்கோன், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி அல்விஸ் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பேராசிரியர் டப்ளியூ. டீ. டப்ளியூ. ஜயதிலக ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த குழுவினால், எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவான இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் அதன் களஞ்சியசாலைகள் உள்ளிட்ட இடங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.