பதுளையில் 18 வயது யுவதி காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

56ff5060 a1b90c75 c0b946b7 d14ef567 dfec6bdd 50462244 0f82bc02 court 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
56ff5060 a1b90c75 c0b946b7 d14ef567 dfec6bdd 50462244 0f82bc02 court 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

பதுளை – களன் தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதான யுவதி காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலதிக வகுப்புக்கு செல்வதாக தெரிவித்து நேற்றைய தினம் வீட்டிலிருந்து குறித்த யுவதி சென்ற நிலையில், அதன்பின்னர் அவர் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.

இதனையடுத்து அவரது தாயாரினால் கஹட்டருப்ப காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதுளை கோபோ பகுதியில் உள்ள நீர்நிலை ஒன்றிற்கு அருகில் குறித்த யுவதி எடுத்துச் சென்ற புத்தகப்பை, கையடக்கத் தொலைபேசி மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளதாக கஹட்டருப்ப காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த தொலைபேசியின் சிம் அட்டை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கஹட்டருப்ப காவல்துறையினர் சம்பவம் தொடர்பான தேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.