ஸ்பெயினில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது!

79491998 f9cb7a21 mask 850x460 acf cropped
79491998 f9cb7a21 mask 850x460 acf cropped

வெளியில் செல்லும்போது முகக்கவசத்தை அணிவதை மீண்டும் கட்டாயமாக்கவுள்ளதாக ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான யோசனைகள் இன்று(23) இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில்,

கடந்த ஜூன் மாத இறுதியில் ஸ்பெயினில் கட்டாயமாக முகக்கவசம் அணியும் நடைமுறை இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது பரவலடைந்துவரும் ஒமைக்ரொன் வைரஸ் திரிபு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்திற்கொண்டு வெளிச்செல்லும்போது முகக்கவசத்தை அணிவதை மீண்டும் ஸ்பெயின் கட்டாயமாக்குகின்றது.

6 ஆவது கொரோனா அலையை சந்தித்துள்ள ஸ்பெயினில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 27 ஆயிரத்திற்கும் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.