நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உதவி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

202102261906087784 Demonstration by the Grama Niladhari Association demanding SECVPF
202102261906087784 Demonstration by the Grama Niladhari Association demanding SECVPF

தங்களுக்கான நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக மத்திய மாகாணத்திற்குட்பட்ட உதவி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் கொவிட்-19 காரணமாக குறித்த நிகழ்வு பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் பயிற்சி பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தங்களுக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என மத்திய மாகாணத்திற்குட்பட்ட உதவி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.