தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கடலட்டையுடன் ஒருவர் கைது

kaithu
kaithu

தமிழகம் – மண்டபம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 150 கிலோகிராம் கடலட்டையுடன் இளைஞர் ஒருவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தின், மண்டபம், வேதாளை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட கடலட்டை உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்படுவதாக பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வனத் துறை, கடலோரப் பாதுகாப்பு குழுக் காவல்துறை மற்றும் உள்ளுர் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில், அண்மையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், மண்டபம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிற்றூர்தியை சோதனைக்கு உட்படுத்தியதில், 12 சாக்குப் பைகளில், பொதி செய்யப்பட்டிருந்த 150 கிலோகிராம் தடை செய்யப்பட்ட கடலட்டைகள், தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கடலட்டைகளைப் பதப்படுத்தி, இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த கடலட்டைகளையும், சிற்றூர்தியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன், அந்த சிற்றூர்தியை செலுத்தவிருந்த 30 வயது இளைஞனையும் கைதுசெய்ய, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.