100 கிலோ தேயிலை கொழுந்திற்கு 40 கிலோ உரம் – அரசாங்கம் தீர்மானம்!

Imege 01
Imege 01

100 கிலோகிராம் தேயிலை கொழுந்திற்கு 40 கிலோகிராம் உரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

கொள்வனவு செய்யப்பட்ட உர தொகை தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் தேவையான உரம் மேலும் இறக்குமதி செய்யப்படும். உரம் தொடர்பிலான பிரச்சினைக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேயிலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள ஆளும் தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று பெருந்தோட்டத்துறை அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இரசாயன உரம் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமையைக்கு தற்போது தீர்வு கண்டுள்ளோம்.

தற்போது உரம் உள்ளது இருப்பினும் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதால் பிறிதொரு பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. 

ஆகவே நிவாரண அடிப்படையில் உரத்தை விநியோகிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். அதற்கமைய 100 கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு 40 கிலோகிராம் உரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட இரசாயன உரம் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் வர்த்தகர்கள் தங்களின் விருப்பத்திற்கமைய இரசாயன உரத்தின் விலையை தீர்மானித்துக் கொள்கிறார்கள். உரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

தற்போதைய இடைப்பட்ட காலத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்டத்துறை அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை தற்போது செயற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.