மன்னார் பிரதேச சபையின் பாதீடு ஒரு வாக்கினால் தோல்வி!

heart attack 5
heart attack 5

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டமானது இன்று (27) முற்பகல் சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஹாஜிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்தநிலையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

21 உறுப்பினர்களை கொண்ட மன்னார் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் எதிராகவும் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்களுமாக 11 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் மூன்று உறுப்பினர்கள் அடங்கலாக 10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.