நா.உறுப்பினர் ஹாசீர் நசீர் அகமட் மாவட்ட அரச பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டிற்கு மட்டக்களப்பு நிர்வாகசேவை சங்கம் கண்டனம் தெரிவிப்பு

IMG 7157
IMG 7157

மட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசீர் நசீர் அகமட் மாவட்ட அரச பயங்கரவாதம் என ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைத்த அந்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு நிர்வாகசேவை சங்க தலைவரும் மேலதிக அரசாங்க அதிபருமான சுதர்ஷpனி சிறிகாந் தெரிவித்தார். 

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் மட்டக்களப்பு நிர்வாகசேவை சங்கம் இன்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 29-12-2021 ஊடகம் ஒன்றில் நடைபெற்ற தீர்வு விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசீர் நசீர் அகமட் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக சேவைகள் உத்தியோத்தர்களின் பெயர்களை பகிரங்கமாக கூறி அவர்களது இடமாற்றம் தொடர்பாக விவாதித்துள்ளார்.

.குறிப்பாக இந்த இடமாற்ற விடயங்களானது பொதுச் சேவை ஆணைக்குழுவின் விடயமாக பிரதேச நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பொறுப்பான பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் இருக்கின்ற நிர்வாகசேவையினரது இடமாற்றம் பற்றி மக்கள் பிரதிநிதி விவாதித்ததோடு குறித்த உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட  பெயர்களை நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியிலே காட்டி ஆதாரமற்ற முறையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாக பயங்கரவாதம் இடம்பெறுகின்றது என்பதை வன்மையாக கண்டிப்பதோடு  மாவட்டத்தில் மாவட்ட நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு உத்தியோகத்தர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான வார்த்தை பிரயோகம் அவர்களின் மனங்களை வேதனைப்படுத்தியுள்ளது.அதேவேளை மாவட்ட அபிவிருத்தியில் அக்கறையோடு செயற்படுகின்ற உத்தியோகத்தர்களை  மிகவும் மனக்கவலையடைந்துள்ளனர் எனவே எதிர்காலத்தில் பொது விவாதத்தில்  இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறக்கூடாது எனப்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர்  ஹாசீர் நசீர் அகமட் இந்த மாவட்ட அரச பயங்கரவாதம் என்றதை வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக மாநாட்டில் நிர்வாகசேவை சங்க மட்டக்களப்பு கிளை செயலாளரும்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி. வாசுதேவன் மற்றும் பிரதேச செயலாளர்கள் நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.