7 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்!

3 d
3 d

ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் பின்னர் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடிய நாடாளுமன்றம் வரும் 7 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது .

கோப் விசாரணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சி எம் பிக்கள் பலர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

ரஞ்ஜித் சொய்சாவின் மறைவையடுத்து இரத்தினபுரி மாவட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வருண லியனகே சபையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து நாடாளுமன்றம் மீண்டும் 7 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.