தமிழ் கட்சிகளால், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டு ஆவணத்தில் இருந்து தமது தரப்பு விலகியமைக்கு இலங்கை தமிழரசு கட்சியே காரணம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று காலை வானொலி ஒன்றில் ஒலிபரப்பான நிகழ்ச்சியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் ஆவணமாக கருதியே, அது தொடர்பான கலந்துரையாடல்களில் தாம் பங்கேற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், அதன் நோக்கத்தை இலங்கை தமிழரசு கட்சி மாற்றியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.