கொள்வனவுசெய்யும் போர்வையில் 3 உந்துருளிகளை கொள்ளையிட்டவர் கைது!

kaithu
kaithu

மூன்று உந்துருளிகளை அபகரித்துச் சென்ற நபர் ஒருவரை பதுளை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் 13 இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது. 

கொள்வனவு செய்வதாகக் கூறி, சோதனை ஓட்டத்துக்காக குறித்த உந்துருளிகளை பெற்று, குறித்த சந்தேகநபர் அவற்றுடன் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பதுளை மற்றும் மஹியங்கனையில் இருந்து இவ்வாறு உந்துருளிகளை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பதுளையை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.