தங்கம் வென்ற யுவதிக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கிய சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்

a7829bf4 ce50 43d8 8dbb ff81ad6adc5a
a7829bf4 ce50 43d8 8dbb ff81ad6adc5a

கடந்த மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பாகிஸ்தான் இரண்டாவது சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று முல்லைத்தீவு யுவதி கணேஷ் இந்துகாதேவி மாவட்டத்திற்கு மாத்திரம் அல்லாமல் இலங்கைக்கு பெருமை தேடித்தந்தார்

3c64744b 3978 44ce 91e7 82329a857f47

இவ் யுவதியை பாரட்டி 07/02/2022 நேற்றைய தினம் 100000 ரூபா சன்மானமாக கனடா ரீமாக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஷான் தயாபரண் அவர்களின் நிதி உதவியுடன் சமூக பொருளாதார அபிவிருத்தி (SEDO )நிறுவனதால் வழங்கி வைக்கப்பட்டது.

0e85e45e 5b8a 4f3a 8392 39491dd9ed28

இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் நாமல் ராயபக்ச அவர்களின் வன்னி மாவட்டதிற்கான விசேட பிரதிநிதி நிரோஷான் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின்(SEDO) இயக்குனர் திரு சுதாகர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சத்திய சுதர்சன் அத்துடன் புதியநகர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.