வவுனியாவில் அதிக பனிமூட்டம் : பயணிகள் அவதி

IMG 20220221 070930 resize 49
IMG 20220221 070930 resize 49

வவுனியாவில் கடந்த அண்மைய நாட்களை விடவும் இன்று சற்று அதிக பனிமூட்டமாக காணப்படுகின்றது. கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தை மேற்கொள்வதில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

IMG 20220221 071006 resize 78

இதன் காரணமாக ஏ9 வீதி, மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியை பாய்ச்சியபடி சென்றமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதனால் அதிகாலையில் தமது கடமைகளுக்கு செல்லும் வாகன சாரதிகள், அரச ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு தரப்பினர் இன்றைய தினம் போக்குவரத்து பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.