இ.போ.ச எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு டீசல்!

sri lanka bus
sri lanka bus

இலங்கை போக்குவரத்து சபையின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கான டீசலை வழங்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் கீழுள்ள 45 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தனியார் பேருந்துகள் மாத்திரமின்றி சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களினூடாக டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இன்று முதல் தனியார் பேருந்துகள் எரிபொருள் பெற்றுக்கொள்ளக்கூடிய
இ.போ.ச டிப்போ எரிபொருள் நிலையங்கள் வருமாறு

கொழும்பு – ஹோமாகம , மொரட்டுவ, மீதொட்டமுல்ல, தலங்கம, உடஹமுல்ல

கம்பஹா – ஜாஎல, கிரிந்திஎல, கடவத்த, நிட்டம்புவ

களுத்துறை – அளுத்கம, ஹொரணை, களுத்துறை, மத்துகம

கண்டி – கண்டி தெற்கு, உடுதும்பர

தென்பகுதி – அம்பலாங்கொட, அக்குரெஸ்ஸ, எல்பிட்டிய, ஹக்மன, மாத்தறை, உடுகம, கதிர்காமம், தங்காலை

நுவரெலியா – ஹங்குராங்கெத்த

சப்ரகமுவ –  தெரணியகல, எம்பிலிப்பிட்டிய, கொடகவெல, கலவானை

ஊவா – மொணராகலை, வெல்லவாய

வடமேற்கு – குளியாப்பிட்டிய, நிகவெரட்டிய, கல்கமுவ

வட மத்தி – அநுராதபுரம், தம்புள்ளை, ஹொரவப்பொத்தானை, கெப்பித்திகொல்லாவ, பொலன்னறுவை

வடக்கு – காரைநகர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி

கிழக்கு – மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மூதூர்