வவுனியாவில் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் குற்றச் செயல்கள் குறித்து காவற்துறையினர் விசேட நடவடிக்கை

IMG 5149
IMG 5149

வவுனியாவில் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் குற்றச் செயல்களை தடுத்தல் குறித்து காவற்துறையினரால் மாணவர்களுக்கு தெளிவூட்டும் விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் இந்நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (09) நடைபெற்றது.

இதன்போது உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு சிறுவர் உரிமைகள், தொலைபேசி பாவனையால் ஏற்படும் விபரிதங்கள், சாரதி அனுமதிப் பத்திரமின்றி மோட்டர் சைக்கிள் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள், போக்குவரத்து விதிமுறை, போதைப் பொருள் பாவனை மற்றும் சமூக விழிப்புணர்வு தொடர்பில் காவற்துறையினரால் மணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

நிகழ்வில் உலுக்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி  ஜகத்தாலா பண்டாரா தலைமையிலான காவற்துறை குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.