43 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

sl police
sl police

சேவைத் தேவையின் அடிப்படையில் 43 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

4 பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு மேலதிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள், மூன்று பொலிஸ் அத்தியட்சகர்கள், 07 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 07 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 16 பொலிஸ் பரிசோதகர்கள் என 43 அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.